Otteri Selvakumar Tamil poems, ஓட்டேரி செல்வகுமார் [read any book .txt] 📗
- Author: ஓட்டேரி செல்வகுமார்
Book online «Otteri Selvakumar Tamil poems, ஓட்டேரி செல்வகுமார் [read any book .txt] 📗». Author ஓட்டேரி செல்வகுமார்
கூத்தாடிகள்
கூத்து ஆடினார்கள்
சந்துக்கு சந்து ...
மக்கள் கூட்டம்
கூட்டமாய் ...
ரசித்து மயக்கத்தில்
நின்றது ....
ஓட்டுகளை
வாங்க ...
கூத்தாடிகள்
கை நீட்டினார்கள்
மக்களிடம் ...
ஒட்டு கூத்தாடிகளுக்கு
மட்டும் ...
கிடைத்தது ...
சட்டசபை நாடக
சபை ஆனது
நாடு ...
சாராயமயம்மானது ....
கூத்துகளை
சன் நியூஸ்ல்
தினமும் பார்க்கலாம்
ரசிக்கலாம்
ஒட்டு போட்டதற்கு
கொஞ்சம்
தலையை சொரீஞ்சிகலாம்
அதுசரி
வேறு என்ன
செய்ய முடியும் ?
தாஜ் மகால்
காதல் சின்னமா ?
கேள்வி உங்களுக்கு ....
காரணம்
சஜாகானின் எழு மனைவிகளில்
நாலாவது மனைவிதான்
மும்தாஜ் ...
படு கேவலம் .....
சாஜகான் மும்தாஜை
கல்யாணம் செய்வதற்காக
மும்தாஜின் முன்னாள்
கணவனை கொன்றானாம் சாஜகான்
இது இன்னும் கேவலம் ....
மும்தாஜ் பதினாலாவது
பிரசவத்தின் போது
மரிதாராம்.....
அட பாவமே ...
அதன்பின்
காதலுடன் மும்தாஜின்
தங்கையை மணந்து
சே...சே ....
ஜாலியாய் ....
கட்டினாராம் அன்பு தாஜ்மாகால்
இது போய்...
அன்பின் சின்னம்
காதலின் கைவண்ணம்
கணவனின் சொப்பணம்
என்று சொல்லி
வரலாறை கரை படுத்திய
கஸ்மாளங்கள் ஒழிக ....
தாஜ் மகால் அழகுதான்
ஆனால்
என்ன செய்ய ..?
உலகின் மிக பெரிய
அழகான கல்லறை
காதலின் சின்னம் என்பது
வரலாறு அறியாதவர்களின்
உடான்ஸ் ...
வரலாறு அறிந்தவர்களின்
ரோமன்ஸ் ...
கேவலம் தான் அட ...
இருந்துட்டு போவட்டும் ...
இந்தியாவில இருக்குற
பல கேவலதுல இதவும் ஒன்னு
ஒத்துகொங்கோ ...
காதல் கூத்து
அப்போ
எனக்கு
அவளை பிடிக்கவில்லை
அவளுக்கு
என்னை பிடித்தது
இதனால்
அவளுக்கும்
எனக்கும்
அடிகடி மோதல்
பின் கொஞ்ச நாளில்
அவள்
எனக்கு காதலி
ஆனால்
இப்ப
நான் அவளை
விரும்புகிறேன்
அவள் என்னை
வெறுகிறாள் ...
அடிகடி...
"இன்ன நெய்னா
எப்படி கிற ?
நல்ல கீரியா?"
என கேட்டது பூமி
"நான்
நல்லா இல்ல
நீ நல்லா கீரியா?"
நான் பூமியை விசாரிக்க
"நீ நல்லா இல்லன்னா
நான் எப்படி நல்லா
இருக்க முடியும் ?" பூமி பொருமியது
" உனக்கு என்ன கவலை ?"
நான் கேட்டது தான் தாமதம்
"என் மேல குப்பை கொட்டி ...
எச்சில் துப்பி....
முத்திரம் அடித்து
கக்குஸ் போய்....அசிங்கம்
பண்ணி உனக்கு என்ன கவலைன்னு
கேக்கிறது நாயம் இல்லை "
என்றது பூமி கண்களை கசக்கியவாறு
"சரி அழுவாதே ..."
நான் சொல்ல
"அழுவ கூட எனக்கு உரிமை இல்லியா ?"
பூமி கத்தியது
"குளு குளு எ.சி
ஓசோனில் ஓட்டை
காட்டை அழித்தல்
விவசாய நிலம் விடுகளானது எல்லாம்
உன்னை பாதித்து இருக்கு உன்னை
அதற்கு நான் மட்டும் என்ன செய்யா ?"
நான் திருப்பி கேட்க
பூமி மெல்ல மெல்ல சிரித்தது
அந்த சிரிப்பு வெறும் சிரிப்பாய்
இருக்கவில்லை
இனி வர விருக்கும்
சுனாமி மற்றும்
பூகம்பத்தின் அறிகுறியாய்
எனக்கு புரிந்தது
நேற்று பேரூந்தில்
அவளை பார்த்தேன்
சிறுது சிரித்தாள்
நானும் சிரிதென்
இன்று
மீண்டும்
பேரூந்தில்
அவளை பார்த்தேன்
அவள் சிரித்தாள்
நானும் சிரிதேன்
உடன்
சிரித்த அவள் அருகிள் போய்
நின்று
என் கண்களால் கவிதை
படித்தேன் ...
அவள் கண்டும் காணாமல்
இருக்க ...
நான் விரக்கதி ஆக ...
அவள் கேட்டால்
"என்ன லவ்வா ?"
"ஆமாம் "நான் தலை அசைக்க
"ஆயிரம் ரூபா கொடு
ஐந்து மணிநேரம்
ஜாலியா லவு பண்ணு....
அப்புறம் வேற
வழியை பாத்து
போய்கிட்டு இரு ...என்ன ? "
சொன்னாள் அவள்
என் பாக்கெட்டில்
இருந்த மனிபர்சில் அபோது
ருபாய் ஆயிரம் இருந்தது
ஆனால்
நான் ஆவலுடன்
அவளுடன் போகவில்லை
ஒரு பக்கம் பயம்
ஒரு பக்கம் பிடிக்கவில்லை ...
அவளை அல்ல
அவள் காதல் தொழிலை ...
நாரதர் கலகம்
ஞான பழ சண்டை
முருகன் ஆண்டி
பரம சிவம் குடும்பம்
போண்டி...
அட பாவிகளா ?
ஒரு பழத்துக்காக
கடவுள்களான
நீங்க அடிச்சி கீட்டா
லோகத்துல
நாங்க கோடருக்கும்
மேட்டர்ருக்கும்
அட்சிகிறது என்ன தப்பு ?
சொல்லு ...
ஒழுக்கம் கெட்ட
உங்கள கும்புடு போட்டு
வாழறதை விட...
ஒழுக்கம் கெட்டு
நாங்க பசி பட்டினீலா
வாழ்ந்து சாவுறது
கோடி புண்யம்.....
ஆளை விடுங்க...
இப்படிக்கு
ரிஷகாரன் முனுசாமி
மெரினா கடல்கறை
பெரிய படகு மறைவில்
ஆணும் ...
பெண்ணும் ...
உட்காந்து இருந்தார்கள்
சூரியன் தீயாய்
நன் பகலில் கொளுத்த
கடல் காத்து வாங்கி
ஜாலியாய்
உல்லாச ஜோலி நடக்கிறது
சில முத்தங்களுடன்
சில சத்தங்கள்
சில சத்தங்களுடன்
சில சாகசங்கள்
உடலில் உயிர் கலக்க
உய்ரில் உடல் கலக்க
அவிந்து போனது
ஆடைகள் மட்டும் அல்ல
அவமானம்
ஆம் ...
அவன் கூவமா ?
அவள் சாக்கடையா ?
காமகடலில் சங்கமித்து
சல்லபிதபின்...
அவள் அவனிடம்
ருபாய் ஐந்து நூறு பிடுகினாள்
"நாளன்னிக்கி இத போலல்ல...வந்துடு"
என்றான் அவன்
அவளும் "சரி நீ கால் பண்ணு " என்றால்
அவன் பொம்பள பொறுக்கி
காமத்திற்காக
அவள் ஆம்பள பொறுக்கி
வாழ்வதற்காக
அவளவுதான் இங்கு ...
காதல் கஸ்மாலம்
எல்லாம் இந்த மெரினா
கடல் கரையில்
அனுதின
காதல் அபசாரம் ...?
இல்லை விபச்சாரம் !!!!!!!
ஓவியம் 1
சின்ன விடுதலை
கிளி ஜோசியம்
மூட நம்பிக்கைதான்
இருபினும்
கொஞ்சம் விடுதலை
கிளிக்கு ....
காசு மட்டும்
கிளி ஜோசியனுக்கு ...
கேட்பவனுக்கு
ஐந்து ருபாய் செலவு
மீண்டும்
சிறையில் கிளி
சின்ன விடுதலை தேடி
கத்துகிறது
அடுத்த கஷ்டமரிடம்
"அக்கா அக்கா" என்று
நடத்துகிறது நவீன போராட்டம்
ஒரு ரெண்டு நிமிச
சின்ன விடுதலைக்காக
மரங்கள்
கோடைக்கு
குடைகள்....
மழைக்கு
விசிறிகள் ...
பூமிக்கு
மரங்கள் ரத்த
சொந்தங்கள் ...
மரங்கள் இல்லாவிட்டால்
பூமி எப்பவோ ...
இறந்து போய் இருக்கும்
மழை இல்லாமல்
மட்டும் அல்ல ...
நிழல் இல்லாத
பூமி
நிஜத்தில் சூரிய கிரகம்தான்....
மரங்கள்
பூமிக்கு வரங்கள்தான்
சாபங்கள் அல்ல
சாபங்கள் இங்கு
மனிதர்களாகி விட்டதால்
மரங்கள் மீண்டும் மீண்டும்
வெட்டபடுகிறது....
கத்தியோடு ரத்தம் இன்றி
தினம் பல கொலைகள்
இந்த பூமியில் நிகழ்வதால்
மரம் மரிக்கிறது
பூமி மீது சிலுவையாக
மழையும் உடன் மரிக்கிறது
வேகமாக ...
நாளை அல்லது நாளை
ஒரு நாள் கண்டிப்பாக
பூமி பாலைவனமாகிவிடும்
அப்போது
மனிதர்கள் பூமியில்
மரங்களை தேடுவார்கள்
கூகுளில் கூட ....
மரம் என்னும் உயிர் இருந்த அடயாளம்
ஒன்று கூட இல்லாமல் இருக்கும்
அப்போது ....
மனிதர்கள்
எந்த மரத்தை வெட்டுவார்கள் ?
என்பதை மட்டும் இப்போதைக்கு
சொல்லமுடியவில்லை .....
என் கண்ணீர்
மழையில் ...
நம் காதல்
நினனவுகளுடன்
காகித கப்பல் விடுகிறென் ...
காதல் கடலில்
என் கப்பல்
முல்குகிறது ...
மீண்டும் மீண்டும்
என் கனவுகளில் ...
சாதி மதத்தை விட
உன் இதயமே ...
நம் காதலின்
கல்லறை ஆகிவிட்டதால்
உன் நினைவுகளில்
என் இதயம் உடைந்து
கண்ணீர் சிந்துகிறது
உன் மீது கவனமாக
நம் காதல் மீது கவலையாக
உளுக்குள் அழுது
வெளியில் சிரிகிறேன்
கோமாளியாய் ....
ஆனால்
கொஞ்ச கோபமாய் ...
ரொம்ப வெறுப்பாய் ...
வேறு என்ன செய்து தொலிக்க...?
இது ஒரு தொடர்கதை
சிந்தித்து சிந்தித்து
எந்திரம் மாகிவிட்ட
தலையும் ...
இதயமும் மட்டும்
இரும்பாய் இருக்க
உடல் மட்டும்
களிமண்ணாகி விட்டது
இனம் இன்னதென்று
தெரியாமல்....
மனிதன் மீண்டும்
ஒரு குரங்கை பொல
உரு எடுத்து இருந்தான்
நல்ல வேளை
வால் மட்டும் இல்லை
அதனால் என்ன ?
தாவுகிறான்....
பிடுன்கி தின்கிரான் ...
கடிக்கிறான் ...
சண்டை போடுகிறான் ...
அடாவடி செய்கிறான் ...
சிந்திக்க மட்டும்
மறுக்கிறான்
காரணம்
மீண்டும் மனிதனாகி விட்டால்
என்ன செய்வது ? என்று
சிந்திக்க மட்டும்
மறுக்கிறான் ....
உயீர் உள்ள பிணமாக
ஆனால் குரங்காக
இது இன்று மட்டும் அல்ல
நாளையும் தொடரும் ....
Comments (0)