readenglishbook.com » Poetry » Otteri Selvakumar Tamil poems, ஓட்டேரி செல்வகுமார் [read any book .txt] 📗

Book online «Otteri Selvakumar Tamil poems, ஓட்டேரி செல்வகுமார் [read any book .txt] 📗». Author ஓட்டேரி செல்வகுமார்



1 2 3 4
Go to page:
நூல் முகம்

 

 

 

யம்மா யம்மா யம்மா  

 

 

 

 

தமிழ் கவிதைகள் 

 

 

 

 

 

ஓட்டேரி செல்வகுமார்

யம்மா யம்மா யம்மா

ஓட்டேரி செல்வகுமார்

 1984 இல் இருந்து தமிழில் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன் என பல மொழிகளில் நான் எழுதிக் கொண்டிருந்தாலும் தமிழ் எனது தாய் மொழி என்பதால் நான் எழுதுகிறேன் ....

எழுதுகிறேன் என்றால் மிகையல்ல தமிழில் எழுதுவது என்பது ஒரு சுகமான விஷயம் அந்த ரீதியில் நான் 2013-14 வருடங்களில் இணையதளத்தில் எழுதினேன் பதிவுகளாக அப்படியே இருந்தது உடனே அதை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு இந்த கவிதைத் தொகுப்பாக இதைப் படித்து ரசித்து இன்புறும்படி வேண்டுகிறேன்...

அதுதான் இந்த

"யம்மா யம்மா யம்மா  "

உங்கள் முன் கவிதை தொகுப்பாக இது எனது 6 வது கவிதை தொகுப்பு

அன்புடன்

ஓட்டேரி செல்வகுமார்

சிலசமயம்

 கவிதை இன்னா யன்ன ? 

களுதை இன்னா யன்ன ? 

ரெண்டும் ஒன்னுதான் தெரியுமா ? 

தெரியலன்னா ... 

தெரிஞ்சிக்கோ ... 

ரெண்டும் ... 

சில சமயம் 

மட்டும் 

"உதைக்கும்...." 

அதுவும் 

"பின்னாடி உதைக்கும்" 

எப்பவும் 

யாரையும் ...

கோவம்

 

அடிபட்ட புலி 
புல்லை மென்று துப்புகிறது 
பசியை விட 
கோபமாக இருப்பதினால் 
புலியின் கோபம் 
கேவலம் புல்லில் 
அஜீரணமாகி 
ஜீரணமாகிறது ... 
நிதானமாக ?

 

யம்மா யம்மா யம்மா

அம்மா 

வார்தை அல்ல 


அன்பின் முதல் (க)விதை 

என்னமாய் புளுகுகிறார்கள் 

கவிதையில்... 

படுபாவி 'கவி'கள் 

அய்யோ ? பாவம் 

அம்மா வீட்டு 

அடுபடியில் 

இன்னமும் 

வெந்து கொண்டு இருகிறாள் 

அம்மா 

அரிசி ? சோறாக... 

அனுதினமும் 

நொந்து போகிறாள் 

கூட்டி பெருக்கும் 

....வேலைக்காரியாக ... 

......குப்பை காரியாக .... 

உலகில் இன்று 

வீடுகளில் 

மற்றும் 

'அநாதை' இல்லங்களில் 

மிக மிக கவளைகிடமாக

 

உனது

நீ 
உன் 
மௌனத்தை 
கழித்துவிடு .. 
என் இதயம் 
வகுபடுகிறது 
ஓ.. 
ஒ...

உன் 
கண்களில் ... 
துண்டு துண்டாக

 

பிள்ளையாரும் = சாமியாரும்

அன்று 

அரச மரத்துக்கு 

ஒரு பிள்ளயார் 

அமர்த்திருந்தார் 


இன்று... 

அரச மரத்திற்கு 

ஒரு சாமியார் 

உட்காந்து விட்டனர் ... 

காவி உடை போட்ட 

கடவுளாக ... 

அன்று 

பிள்ளையாருக்கும் 

தொப்பை .... 

இன்று 

சாமியார்களுக்கும் 

இருக்கிறது 

தொப்பை .... 

அன்று 

பிள்ளையார் 

செய்தது 

இலவச சேவை ... 

இன்று 

சாமியார் 

செய்வது 

வியாபாரம் .... 

அந்த 

பிள்ளயார் 

பீடி பிடிக்கமாட்டார் 

இந்த 

சாமியார் 

சாராயம் குடிப்பார் 

பீடியும் பிடிப்பார் ... 

அன்று - 

பிள்ளயார் 

சந்நியாசி 

இன்று - 

சாமியார் 

சம்சாரி 

இதைவிட பெரிய 

வித்தியாசம் 

பிள்ளை யாருக்கும் இல்லை 

சாமியாருக்கும் இல்லை 

ஆமாம் 

நீங்க பிள்ளையாரின் ரசிகரா? 

சாமியாரின் விசிரியா ? 

இருப்பினும் வாழ்க ..

நர்சரி ஸ்கூலில் 

எனக்கு abcd மற்றும் 

அ ஆ இ ... 

சொல்லிகொடுத்த பெரிய பின்னல் 

அழகி சுந்தரி மிஸ்சுகும் , 

6 ம் வகுப்பில் மாணவர்கள் 

அனைவரையும் 

கிண்டல் அடித்து 

அடித்த குணசேகரன் 

சாருக்கும், ... 

9 ம் வகுப்பு கணக்கு 

போடா தெரியாத வாத்தியார் 

பகவன்தாசுக்கும் விற்கும் ... 


எனக்கு நெத்திலி என 

பெயர் சூட்டிய நளினி 

டீசெருக்கும் 


தன்னிடம் டூஷன் படிக்காததால் 

காரணமே இல்லாமல் 

குண்டியில் பிரம்பால் 

அடித்த சயின்ஸ் கண்ணன் 

சாருக்கும் 

மற்றும் என் நினைவில் 

டுபாகூரா வாழும் 

பிள்ளயார் - இந்த்ராணி - வடிவேல் - தமிழ் அய்யா சீனு. ரசகோபலனுக்கும் ... 

ஆசிரிய முண்டங்களுக்கு .... 

வாழ்த்தவும் தோணலை 

வணங்கவும் தோணலை 

காரிதான் துப்பதொணுது.... 

கஸ்மாலம்... 

இதுககிட்ட படிசதுக்கு 

நான் மெய்யாலும் 

வருத்தபடுகிறேன் இன்றும்... 

இருப்பினும் வாழ்க இதுகள் 

என வாழ்த்த எனக்கு 

பெரிய மனசு 

இல்லை ஒழிக ... 

ஆமாம் ஒழிக ... 

ஒழிக ஒழிக 

வேற என்ன செய்ய போறீங்க ?

 தண்ணீர் வராத 

தெரு பம்பில் 

தண்ணீர் அடிக்கும் 

சிறுவன் .... 

வரிசையாய் 

நின்று 

நின்று தண்ணீர் கேட்டு 

வெயுளில் 

காய்ந்து போன 

கலர் 

கலர் 

குடங்கள்.... 

இன்னும் இந்த ஊருக்கு 

கிருஷ்ணாவும் வரல 

வீராணமும் வரல 

ஆனா ... 

வந்துவிட்டது 

பத்து ருபாய்க்கு 

பாட்டிலில் மினரல் குடிநீர் 

அட உலக பொதுவான 

தண்ணி கூட 

காசு பணம் கொடுத்து 

வாங்கி குடிகனும் 

அப்படின்னா ... 

ஓசில அரிசி எதுக்கு ? 

மலிவு விலை 

சாம்பார் சாதமும் 

தயிர் சாதமும் 

என்னத்துக்கு ? 

சாப்புட்டு பூட்டு 

குடிக்க தண்ணி இல்லாம 

விக்கல் எடுத்து 

சாகரத்துகா? 

இல்லை 

தண்ணிக்கு 

பதிலா 

கூவம் சாக்கடைய 

குடிகிறதா.... 

கொஞ்சம் சொல்லுங்க 

இல்லாட்டி 

கொஞ்சம் தள்ளுங்க .... 


ஒரு சென்னை வாசியின் 

பின் குரல் : 

ஏற்கனவே 

கூவம் சாகடையீல் 

பாத்திரம் கழுவறோம் 

துணி துவைகிறோம் 

குளிக்கிறோம் ....

கொவிந்தா ...கொவிந்தா

 

நல் இரவில் 

பெற்றோம் ... 

இன்னும் 

விடிய 

வில்லை 

என்று 

யார் 

சொன்னது ? 

விடிந்தது 

காலை 

பொழுது ... 

ஆனால் 

களவுபோனது 

விடுதலை 

ஒரு 

நாள் 

விடுமுறையாக ... 

அய்யா 

ஜாலி 

என்கிறார்கள் 

என் 

இந்திய 

மக்கள் 

ஜனநாயகம் 

அராஜகம் 

ஆகிவிட்டதை 

கூட 

அறியாமல் ? 

அட ... 

சத்தமாய் 

போடு 

"கொவிந்தா" 

ஒரு 

முறை 

அல்ல ... 

ரெண்டு 

முறை ...

 

பலி

ஒரு மார்ச் மாத 

புதன் கிழமை 

அம்மாவசை அன்று 

பகல் மணி 12:00 மேல் 

சாலைகள் எங்கும் 

ஒரே பூசணி 

காய்களை மஞ்சள் குங்குமம் 

இட்டு .... 

மிக்க மரியாதையுடன் 

வீட்டை சுற்றி 

கடையை சுற்றி 

எல்லாம் உங்க கண் திருஸ்டிகாக 

சாலைகளில் ... 

வீதிகளில் ... 

பலியிடுகிறார்கள் 

சிகப்பு குங்குமம் கலந்து 

பாவம் பூசணி ... 

ரத்த வெள்ளத்தில் ? 

உடைபட்டு ... 

சாலைகளை குப்பை ஆக்குகிறது 

சிவப்பு குங்குமம் பூசி ... 

அது தான் .... 

தவிர வேறு திருஷ்டி கழிந்ததா 

என்பது ... 

எனக்கு ஒன்னும் தெரியலை 

அதற்கு 

அடுத்த நாள் "தினதந்தி" 

நாள் இதழ்லில் 

12 பக்கத்தில் ஒரு 

பெட்டி செய்தி 

"திருஷ்டி பூசணி சறுக்கி 

மோடார் சைக்கிளில் போன 

டாக்டர் பலி ...." 

படித்து கவலை பட்டேன் 

நண்பர்கள் பேசிகொண்டார்கள் 

திருஷ்டி தொலிந்ததென்று 

என்ன எழவோ எனக்கு 

ஒன்னும் புரியலை ... 

ஆமா ... 

உங்களுக்கு என்ன 

புரிந்தது ...?

 

காதல் கஸ்மாலம்

உன் பெயரில் 

உயிர் மெய் எழுத்து 

எதுவும் இல்லை 

அதனால் என்ன ? 

உன் உயிர்ராய் 

நான் ... 

இருக்க ... 

உயிர் மெய் எழுத்தாய் 

என் பெயர் இருக்க ... 

நீ 

என்னை அழைக்கும் 

ஒரு ஒரு முறையும் 

உயிர் பெறுகிறது 

எனது ஆத்மா 

பாவங்களில் மரணிக்காமல் 

புனிதம் பெறுகிறது 

காதல் புனிதம் 

என்பதால் .... 

அதுசரி 

நம் காதல் 

கஸ்மாலமா ...? 

கத்தரிக்காயா? 

நீ சொல்..... 

ஆயிரம் பொய்

ஆயிரம் பொய் சொல்லி 

கல்யாணம் செய்து 

வைத்தார்கள்.... 

அவனுக்கும் 

அவளுக்கும் 

அவன் வேலைக்கு போகாத 

குடிகாரனனான்... 

அவளை தினமும் 

அடித்து துவைத்து 

படினியீல் 

காய போட்டான் 

கதறி கதறி அவள் 

செத்து செத்து போனாள்... 

சீர் கொண்டுவந்த 

பாத்திர பண்டங்களும் 

நகைகளும் 

கொஞ்ச கொஞ்சமாய் 

விற்கபட்டன .... 

ஒருநாள் 

அவன் ஓவராய் குடித்ததில் 

இறந்து போனான் 

ஆறு வருடன்களாக 

அழுத அவள் சிரித்தால் 

அடாடா 

ஆயிரம் பொய் 

அவன் மரணம் 

அவள் விதவை 

வாழ்க்கை நாசம் 

திருமணம் இங்கு பொய் 

பாவத்தில் நிச்சைக்கபட்டு... 

பின் 

மரணிகிறது அருவெறுப்பாக ... 

ஆனால் 

என்ன ? 

சொர்கத்திற்கு மட்டும் 

டூ விடவில்லை 

ஏன்? 

1 2 3 4
Go to page:

Free e-book «Otteri Selvakumar Tamil poems, ஓட்டேரி செல்வகுமார் [read any book .txt] 📗» - read online now

Comments (0)

There are no comments yet. You can be the first!
Add a comment